மதுராந்தகம் தொகுதி வெற்றி வேட்பாளர்

மல்லை சி .ஏ .சத்யா

  • துணை பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திமுக
  • தலைவர், மல்லை தமிழ் சங்கம்
  • இயக்குனர், மாமல்லபுரம் அரிமா சங்கம்
  • கெளரவதலைவர், தற்காப்பு கலைகள்
  • தலைவர், மஞ்சூரியா குங்பூ தற்காப்பு கலை
சொடுக்கவும்!! மல்லை சத்யாவின் விவர காணொளி..

01

செயல்பாடுகள்

படைப்புகள்

சமூக நலன் சார்ந்த பல புத்தகங்களையும், சமூக அக்கறை குறித்து விரிவாக பேசும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்..

மல்லை சத்யாவின் படைப்புகள் ..

  • வாகை சூடுவோம்
  • நெடுங்கதை மனங்கள்
  • தீண்டாத காதல்
  • பறவைகள் பலவிதம்
  • சவால்கள் (அச்சில்)

அரசியல்

27ஆண்டுகால அரசியல் பணியில், போராட்டங்கள், சிறைவாசம், மக்கள் அதிகாரம் என பல பக்கங்களை கொண்டவர்.

மல்லை சத்யாவின் அரசியல் வரலாறு..

  • சிறந்த பேரூராட்சி தலைவருக்கான விருது
  • எண்ணற்ற மக்கள் போராட்டம்
  • 5 முறை சிறை
  • 100 க்கும் மேற்பட்ட 1 நாள் கைது

தமிழ் மொழி சேவை

தமிழ் சங்கங்கள் மூலம் பல்வேறு மேடைகளில் தமிழ் மொழி வரலாற்று சொற்பொழிவுகளை தந்தவர்.

மல்லை சத்யாவின் தமிழ் மொழிக்கான சேவை ..

  • விஜிபி உலக தமிழ் சங்கம்
  • மல்லை தமிழ் சங்கம்
  • இலக்கிய மாமணி விருது

குங்பூ தற்காப்பு கலை

மாணவராக தேசிய அளவில் பதக்கம் வென்றவர்,இன்று ஆசானாக போதி தர்ம விருது பெற்றவர்

மல்லை சத்யாவின்தற்காப்பு கலை பயனம் 

  • தேசிய அளவில் பதக்கம்
  • போதி தர்மா விருது
  • கிரேட் கிராண்ட் மாஸ்டர் லீ பதக்கம்
  • மாவீரன் நேதாஜி விருது

02

யார் மல்லை சத்யா?

மல்லை சி.ஏ.சத்யா MA.,
துணை பொதுசெயலாளர்-மதிமுக

Mallai C.E.Sathya

மல்லை சத்யா என்றால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் திரு வைகோ MABL ., அவர்களை தொடர்ந்து பார்க்கப்படும் அந்த இயக்கத்தின் அடுத்த கட்ட தலைவர்கள் வரிசையில் முதன்மை வகிப்பவர் தான் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா..

மல்லை சத்யா அவர்கள் ,காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் ,சாலவாக்கம் ஊராட்சி சார்ந்த குரும்பிறை என்கிற கிராமத்தில் சி.ஏகாம்பரம்,நாகம்மாள் தம்பியதருக்கு மகனாக 10.12.1963 அன்று பிறந்தவர்.. மாணவ பருவத்திலேயே சமூகத்தின் மீதும், சமூக கட்டமைப்பின் மீதும் அக்கறை கொண்டவராக இருந்ததால் படிப்பையும் சமூகம் சார்ந்தே படித்து, சமூகவியலில் முதுகலை பட்டம் படித்தவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக அனைத்து அரசியல் களங்களிலும், போராட்டங்களில் மதிமுக பொது செயலாளர் திரு வைகோ அவர்களுக்கு தளபதியாக இன்று வரையும் இருந்து, மக்கள் போராட்டங்கள் மூலம் வைகோ அவர்களோடு சிறைவாசம் அனுபவித்தவர், எழுத்தாளர், மல்லை தமிழ் சங்கத்தின் தலைவராகவும் பல்வேறு தமிழ் சங்கங்களோடு இணைந்து தமிழ் மொழிக்கான சேவையை இன்றுவரை ஆற்றி வருபவர், சிறந்த சொற்பொழிவாளர், தொலைகாட்சி ஊடக விவாதிப்பாளர் என தொடர்ந்து தனித்துவ சமூக செயல்பாட்டளராக இடையறாமல் மக்கள் பணியில் பல்வேறு தளங்களில் பயணித்து வருபவர். 1996 முதல் 2001 வரை மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி தலைவராக இருந்து, மாமல்லபுரம் பேரூராட்சி மக்களுக்கு பல்வேறு சேவைகளை சிறப்பாக ஆற்றியவர் என்கிற மதிப்பு மதுராந்தக மக்கள் மத்தியில் அதோடு தற்காப்பு கலையான குங்பூ கலையில் சிறந்த மாஸ்டரான அமரர் சேகர் அவர்களின் மாணவரான மல்லை சத்யா அவர்கள்,குங்பூ கலை மாணவராக தேசிய அளவில் சேம்பியன்சிப் பதக்கம் வென்றவர், இன்றும் கடல் கடந்து குங்பூ கலையை வளர்த்து வரும் ,போதி தர்மா விருதும், இன்னும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்… 

தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளுக்காகவும்,நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்காகவும், சமரசமின்றி போராடி வரும் தலைவர் வைகோ அவர்களுடன் போரட்டங்களில் பங்கேற்று ஐந்துமுறை சிறை சென்றுள்ளார்..

பல முகங்களோடு பல தளங்களில் தனக்கான வரலாற்றை எழுதிவரும் மல்லை சத்யா அவர்கள் மதுராந்தக சட்ட மன்ற தொகுதியில், நடைபெற உள்ள சட்ட மன்ற தேத்தல் 2021ல், மதசார்பற்ற கூட்டணி தலைமையில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0

பயணிக்கும் தளங்கள்

0

அனுபவம் (ஆண்டில்)

0

விருதுகள்

0

பொறுப்புகள்

மல்லை சத்யா அவர்கள் குறித்து விரிவாக அறிய

இங்கே சுடுக்கவும்

03

சேவைகளும் & சாதனைகளும்

சேவைகள்

அரசியல் ,தமிழ் தொண்டு ,தற்காப்பு கலையை பரப்புதல், மக்களுக்கான உரிமை சார்ந்த போராட்டங்களில் சிறை தண்டனை கிடைக்கும் என்று அறிந்தும் முன்னேறி சென்று போராட்ட களங்களில் களமாடுவதையே, மல்லை சத்யாவின்  மக்கள் சேவை குறித்த நிலைபாடுகளில் மக்கள் பார்க்கும் சிறப்பு அம்சமாகும். மதிமுக இயக்க தலைவர் வைகோ அவர்கள் விரல் காட்டுகிற திசையில் தமிழின மக்களுக்காக வைகோ எடுத்த அனைத்து அரசியல்,போராட்ட நிலைபாடுகளில் வைகோ அவர்களுக்கு உறுதுணையாக நிற்பதையே மல்லை சத்யா அவர்கள் தனக்கான முக்கிய பொறுப்பாகவும் அதில் தெளிவாகவும், உறுதியாகவும் பயணித்து வருகிறவர் என்றே கூறலாம்..  அந்த உன்னதமான அரசியல் பயணத்தோடு, மாமல்லபுரம் தமிழ் சங்க தலைவராக, தமிழுக்கு தன் பகுதியில் தொண்டு செய்வதோடு, பல்வேறு தமிழ் சங்கங்கள் ,தமிழ் ஆர்வல அமைப்புகள் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தனது இலக்கிய சொற்பொழிவுகள் மூலம் தமிழின் வரலாற்று சிறப்புகளை ,தமிழ் இலக்கிய வரலாற்று சிறப்புகளையும், வரும் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் உன்னதமான பணியை இன்று வரை , தன் தாய் மொழி தழிழுக்கு ஆற்றும் கடமையாக எண்ணி பணியாற்றி வருகிறார்.

சாதனைகள்

மல்லை சத்யா அவர்கள் அவர் பயணிக்கும் அனைத்து தளங்களிலும் தனக்கான ஒரு முகவரியை உருவாக்கி கொள்வதோடு மட்டுல் அல்லாமல், அந்த தளங்களில் சாதனைகளை படைத்தது வருகிறவர் என்பதற்க்கான சான்ற பின் வரும் சாதனைகள் குறித்த விருதுகள் மற்றும் அவர் பெற்ற பட்டங்கள் ஆவன ஆதாரமாக்கபடுகிறது..

04

புகைப்படங்கள்

05

மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

06

News Feed

06

தொடர்புகொள்ள

மின்னஞ்சல்

mallaisathya@gmail.com

தொலைபேசி

9443639234

வாட்ஸஅப்

9786428229

முகவரி

எண் 10, அண்ணா நகர், மாமல்லபுரம் - 603104, காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு.